அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் 25 ஆவது திரைப்படமாக 'சிறை' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாக 'சிறை' திரைப்படம் அமைந்தது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா, மூனார் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்க ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்தார்.இந்தநிலையில் இத்திரைப்படம் இதுவரையில் இந்தியமதிப்பில் மொத்தமாக ரூ. 31.58 கோடி வரை வசூல் செய்துள்ளது.