சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக கணினி சிப்கள் என்றாலே சதுர வடிவில் கடினமானதாக இருக்கும். ஆனால், இப்போது மனித முடியை விட மெல்லிய நூலில் இயங்கும் கணினி சிப்பை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.
மெல்லியதாக இருந்தாலும், 15.6 டன் எடையுள்ள ஒரு பொருள் இதன் மேல் ஏறிச் சென்றாலும் இது உடையாது. இதனால், நாம் அன்றாடம் அணியும் சட்டையிலேயே இந்தச் சிப்பை வைத்துத் தையல் போட முடியும்.
இது மனித மூளையின் திசுக்கள் போலவே மென்மையாக இருப்பதால், பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க மூளை-கணினி இடைமுகக் கருவிகளில் (Brain-Computer Interface) இதைப் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.