இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன். 'ஆர்யா' திரைப்படத்தின் மூலம் தன் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்து இன்று இந்தியளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். குறிப்பாக 'புஷ்பா' திரைப்படம் அவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றுவிட்டது.
இந்தநிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் 'AA22xA6 ' திரைப்படம் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது இத்திரைப்படத்தின் வருமானத்தில் 27 - 30 சதவீதம் தனது பங்காக அல்லு அர்ஜுன் கேட்டிருப்பதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.