T20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தெல் 55 (35) ஓட்டங்களும், ஹரி ப்ரூக் 53 (32) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய நேபாள அணியில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடி காட்டி இங்கிலாந்திற்கு பயத்தை காட்டினர். கடைசி ஒவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட, Sam Curran துல்லியமாக பந்து வீசினார்.
நேபாள அணியால் 5 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. நேபாள அணியில் திபேந்திர சிங் 44 (29) ஓட்டங்களும், லோகேஷ் 39 (20) ஓட்டங்களையும் விளாசினர்.
இங்கிலாந்து அணி போட்டியில் வெற்றி பெற்றாலும் நேபாள அணி இரசிகர்கள் மனதை வென்று விட்டது.