நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'The Paradise' . 'தசரா' திரைப்படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கின்ற நிலையில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்
ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.