நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதனை தொடர்ந்து ரஜினி,கமல் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.