கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற 'Tourist Family ' திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் வெளியான ' With love ' திரைப்படம் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ள நிலையில் அறிமுக இயக்குநர் மதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான ' With love ' திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இத்திரைப்படம் உலகளவில் இதுவரை இந்திய மதிப்பில் ரூபாய் . 26 யினை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.