விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'கர' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, First Look, Title video ஆகியன சமீபத்தில் வெளியாகி இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன.
'கர' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜூ, K.S.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், M.S.பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
G.V.பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென்று திரைப்படக்குழுவினர் Poster ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.