'தேன்', 'இறுகப்பற்று' போன்ற படங்களில் காத்திரமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை அபர்நதி, தனது நீண்டகால அபிலாஷையொன்று தற்போது நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் பெரும்பாலும் சீரியசான கதாபாத்திரங்களையே ஏற்று நடித்ததாகக் குறிப்பிட்ட அவர், நிஜ வாழ்க்கையில் தான் ஒரு கலகலப்பான சுபாவம் கொண்டவர் என்றார்.
இதனால் தனது இயல்புக்கு நெருக்கமான, துறுதுறுப்பான கதாபாத்திரமொன்றில் நடிக்க வேண்டும் என தான் நீண்டகாலமாக அவாக்கொண்டிருந்ததாகவும், தற்போது ஒப்பந்தமாகியுள்ள புதிய திரைப்படத்தில் அவ்வாறான வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.