தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ஆர்யா தனது 40 ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார். நிகில் முரளி இயக்கும் இத்திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா நடிக்கிறார்கள் என்பதுடன் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.