19 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி தொடங்கி மே 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி பெங்களூருவில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு இரத்து செய்துள்ளது.
இதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.