Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
மறு ஆய்வு நிறைவு: அடுத்த சிக்கலில் விஜய்யின் “ஜனநாயகன்”

SOORIYAN GOSSIP - மறு ஆய்வு நிறைவு: அடுத்த சிக்கலில் விஜய்யின் “ஜனநாயகன்”Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமையாததால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமானது

இதற்குப் பிறகு, பல முயற்சிகளை மேற்கொண்ட திரைப்படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது. கடந்த மார்ச் 9ஆம் திகதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று மும்பையில் தணிக்கை குழுவினர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வு செய்ய முடித்துள்ளனர். இந்நிலையில் அரசியல் சார்ந்த கருத்துகள் ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று தணிக்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, படம் வெளியாவது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top