மனிதக் கழிவுகளை உரமாக மாற்றி, விண்வெளி மண்ணைப் பயிர் விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றும் புதிய 'BLISS' திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது.
நிலவிலும் செவ்வாயிலும் மண் பயிர் செய்ய முடியாதபடி நச்சுத்தன்மையுடனும், கூர்மையான கண்ணாடித் துகள்கள் போலவும் உள்ளது.
இதனால், மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றுவது சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விண்வெளி வீரர்களின் கழிவுகளை வீணாக்காமல், அதிலிருந்து நைட்ரஜன் மற்றும் பொஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான மண்ணை, 'வேதியியல் சிதைவு' (Chemical Weathering) மூலம் மென்மையான விவசாய மண்ணாக மாற்ற இந்தக் கழிவுகள் உதவுகின்றன.
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள BLISS என்ற கருவி, கழிவுகளை சுத்திகரிக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.