தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத் தயாரிப்பு நிபுணர்கள் குழுவின் முதலாவது அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த தீர்வுத் திட்ட தயாரிப்பு ஒரு மாதத்துக்குள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதும், உத்தியோகபூர்வமாக கால வரையரையும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.