''சினிமாவில் சாதனை பண்ணுங்க... வேணாம்னு சொல்லல. ஆனால், அதுக்கு முன்னுக்கு ரெண்டு குழந்தைங்கள பெத்து கொடுத்துட்டு நீங்க சாதனை பண்ணுங்க...'' இது கோச்சடையான் இசை வெளியீட்டில்தன் புதல்விகளுக்கு ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை.
இதன்படி ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கோச்சடையான் இயக்கத்தினால் இரண்டு வருடங்களாக தான் தாயாவதையே தள்ளி வைத்திருந்தார்.
குடும்பத்தையே மறந்து படத்துக்காக உழைத்திருந்தும், அவரது உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டதே தவிர, படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பது வேறுகதை.
அடடா, அதெல்லாம் சரி, விஷயத்தை சொல்லிட்டு சட்டுபுட்டுன்னு கிளம்புய்யானு நீங்க பார்க்கிறது புரியுதுங்க,
சரி, விஷயம் இதுதான்!
கடந்த 2010இல் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின், இப்போது கர்ப்பமாகி இருக்கிறார். விரைவில் ரஜினியின் வீட்டில் இன்னொரு குட்டி மழலை தவலப்போகிறது என்ற சந்தோஷத்தில் முழுக் குடும்பமும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது.
வாழ்த்துக்களை நாங்களும் வாரியிறைத்து விடுவோம்.