Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்'...???

thala-ennai arinthaal - இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்'...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்'...???

தமிழ்த் திரையுலகில் இப்போதெல்லாம் அடிக்கடி பரபரப்பாகப் பேசப்படும் ஒரு கதைப்பொருள் ஆகிவிட்டது கெளதம் மேனனின் இயக்கத்தில் 'தல'அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" திரைப்படம்.

'தல' ரசிகர்களெல்லாம், பொங்கல் கொண்டாட்டம் இம்முறை "என்னை அறிந்தால்" திரைப்படத்தோடு தான் என்ற ஆவலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆவலை மேலும் அதிகமாக்கும் வகையில் "என்னை அறிந்தால்" படக்குழுவினர் ஜனவரி முதலாம் திகதி புதுவருடத்தன்று இரட்டிப்பு இன்பஅதிர்ச்சி கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 31 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு புதுவருடம் பிறக்கின்ற வேளையில் "என்னை அறிந்தால்" படத்தின் பாடல்கள் மற்றும் இசையை வெளியிடப்போகின்றார்களாம். அத்தோடு படத்தின் முன்னோட்டக்காட்சி(Trailer) உம் வெளியாகவுள்ளதாம்.

சாதாரணமாகவே விழாக்களில் கலந்து கொள்வதை தல அஜித் தவிர்த்துக் கொள்வதுடன், இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்வதை தல விரும்புவதில்லை.

இந்தநிலையில் "என்னை அறிந்தால்" படத்தின் இசை வெளியீடும் எவ்வித ஆர்ப்பாட்டமும் விழா எடுப்பும் இல்லாமல் இடம்பெறவுள்ளதாம்.

விஷயம் இப்படியிருக்க, தல ரசிகர்களோ வேறுமாதிரி முடிவு செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் விழா எடுக்காவிட்டால் என்ன..? 'ரசிகர்கள் நாங்கள் இசைவெளியீட்டுவிழா கொண்டாட்டத்தை அமர்க்களப்படுத்துகின்றோம்' என கங்கணங்கட்டிக் களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஜனவரி 1-ம் திகதி புதுவருடத்தன்று ரசிகர்களின் ஏற்பாட்டில் களைகட்டவிருக்கும் இந்த இசைவெளியீட்டிற்கு சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு (ரேடியோ மார்க்கெட்) என்ற இடத்தை தேர்வு செய்திருக்கிறார்ககளாம்.  அதுமட்டுமல்லாமல், இந்த விழா ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த ரசிகர்கள் தமிழகம் முழுவதுமுள்ள 'தல' ரசிகர்களை ஒன்று சேர்த்து விழாவினை பிரம்மாண்டப்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுத்தரப்பினர் கவனிக்க, உலகெங்கும் உள்ள 'தல'அஜித் ரசிகர்களோ, நாங்கள் மட்டும் சும்மா இருப்பதா என்ற கேள்வியோடு, சமூக வலைத்தளங்களை அதிரவைக்கக் கிளம்பியுள்ளார்கள்.

சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இந்த விழாவை "ட்ரெண்ட்" செய்து புதிய சாதனை படைக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர வைக்கின்றன.

#தல-தீபாவளி என்று எல்லோரும் சொல்வது போலில்லாமல் இம்முறை உண்மையில் தல ரசிகர்களுக்கு தல-பொங்கல் தான்.

*கணேஷமூர்த்தி ராகவன்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top