வெளிநாட்டு வாலிபர் ஒருவரோடு காஜல் ஊர் சுற்றுகிறார், வெளிநாட்டுப் பயணங்களிலும் டேட்டிங்கிலும் ஈடுபடுகிறார் என்று அண்மைக் காலமாக செய்திகள் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்தவன்னமாக இருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த காஜல், தானாக மனந்திறந்து பேசியுள்ளார்.
வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அப்படி ஒரு மாறு கலாசாரம் கொண்ட ஒருத்தரை நான் திருமணம் செய்து கொள்ளவும் மாட்டேன். நான் இந்தியப் பெண். நான் இந்தியரைத் தான் திருமணம் செய்வேன். நான் கலாசாரப் பிரழ்வுகளுக்குள் சிக்க மாட்டேன். வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
அவர்களின் கலாசாரம் ஆட்டம் பாட்டங்களில் மற்றும் உல்லாசத்தில் கழிந்துவிடும். நமது கலை கலாச்சாரங்கள் அவர்களுக்கு தெரியாது. எனவே, வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி பிரபலம் தேடாதீர்கள் என, பொரிந்து தள்ளியுள்ளார்.
இதற்கிடையில், தனுஷ் ஜோடியாக மாறி எனும் படத்திலும் இன்னும் இரண்டு இந்திப் படத்திலும் அம்மணி நடித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் காஜலுக்கு ஒரு காளையை கட்டிவைக்கும் எண்ணத்தில் வீட்டார் இருப்பது அம்மணிக்கு தெரியுமோ தெரியாதோ?
யாருதான் ஒத்துக்கிட்டீங்க ?ஹீ ஹீ ஹீ
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-