தன்னால் தானே கெட்டுக் கொண்டது என்பது நம்ம
நடிகை அசினுக்கு மிகப் பொருத்தம். தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் ஹிந்திக்கு சென்றார். அங்கு கிடைத்த படங்களில் நடித்தார். சில படங்கள் வெற்றியடைந்தாலும், அவருக்கு என்னவோ பெயர் கொடுக்கும் படங்கள் இற்றை வரை அமையவில்லை.
பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர வாய்ப்புக்கள் வந்தும் தமிழுக்கு வர விரும்பாவில்லை என்று வந்த வாய்ப்புக்களையும் உதறினார். ஹிந்தியை நம்பி காத்திருந்தவருக்கு இறுதியில் படங்களே இல்லை என்றான நிலைமையானது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். யாரும் வாசல் கதவை தட்டும் பாடில்லை.
இறுதியில், அசினின் பார்வை தமிழ் மீது திரும்பியுள்ளது. மாதவன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த வாய்ப்பின் மூலமாகவாவது சரியாக சிந்தித்து வாய்ப்புக்களை கைப்பற்றி தமிழில் மீண்டும் காலூன்றுகிறாரா என்று பார்ப்போம்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
Asin New Photos