நடிகர் சூர்யா நேற்று காலை ட்விட்டரில் நுழைந்து ட்விட்டர் உலகை வலம்வர ஆரம்பித்திருக்கிறார். அவரை வரவேற்று பலரும் ட்வீட் போட்டு வருவதால் #WelcomeSuriyaToTwitter என்ற ஹாஷ்டக்கினை பயன்படுத்தி பிரபல்யப்படுத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தனுஷ், சிம்பு என்று பலரும் ட்விட்டரில் உள்ளனர். அவர்கள் தங்களின் படங்கள் பற்றியும், பிற நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ஏதாவது சுபயோக சுபதினத்தை தேர்வு செய்து ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள். சூர்யாவோ ட்விட்டர் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் மகளிர் தினமான நேற்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் இணைந்துள்ளார். சூர்யா ட்விட்டரில் சேர உள்ளதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகிறார்கள்.
இதனால் ட்விட்டரில் #WelcomeSuriyaToTwitter என்ற ஹாஷ்டக்கினை தேசிய அளவில் பிரபல்யப்படுத்தி வருகின்றனர்.
மேலும் ரஜினி ட்விட்டரில் சேர்ந்த அன்று அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்ததை போன்று சூர்யா விஷயத்திலும் நடக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
எனவே சூர்யா ட்விட்டரில் சேர்ந்தவுடன் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க பலர் முடிவு செய்துள்ளனர்.
இதுவரைக்கும் ட்டுவிட்டரில் பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 60000 மாக அதிகரித்துள்ளது.