2,805 Views
==CASTRO RAHUL ==
சந்தேகமே இல்லை…. “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “இது கதிர்வேலன் காதல்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
கட்சி அபிமானத்தைத்தாண்டி அவருக்கென்று ரசிகர்களும் உருவாகிவிட்டனர். ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள உதயநிதியின் அடுத்தப் படமான ‘நண்பேன்டா’வுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் செம எதிர்பார்ப்பு.
வேறு சில படங்களுக்கும் கோடையில் வெளிவந்தாலும்…. நண்பேன்டா படம் ‘ரியல் சம்மர் ட்ரீட்’டாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் மக்கள்.
உதயநிதி, சந்தானம் கூட்டணியில் ஏற்கனவே வெளி வந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “இது கதிர்வேலன் காதல்” இரண்டு படங்களுமே ரசிகர்களை மகிழ்வித்தன.
நண்பேன்டா படத்தில் ஒருபடி மேலேபோய் உதயநிதி – சந்தானம் இருவரும் இன்னும் கூடுதலாக கலக்கி இருக்கிறார்களாம்.
முந்தைய படங்களில் படம் முழுக்க உதயநிதி உடனேயே பயணித்தார் சந்தானம்.
இந்த படத்தில் சந்தானம் உதயநிதி இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் காமெடிக்கு குறைவு இருக்காது என்கிறார் உதயநிதி.
நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு 95 நாட்கள் நடைபெற்றுள்ளது. சந்தானம் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம்.சந்தானம் இல்லாத காட்சிகளிலும் பல இடங்களில் தனி முத்திரை பதித்துள்ளாராம்.
காமெடி… காதல் காட்சிகளில் மட்டுமல்ல நண்பேன்டா படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் வெளையாடி இருக்கிறாராம் உதயநிதி.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜெகதீஷ், ஓகே ஓகே பட இயக்குநர் ஆர். ராஜேஷிடம் உதவியாளராக இருந்தவர்.
நண்பேன்டா படத்தைப் பற்றி இயக்குநர் ஜெகதீஷ் என்ன சொல்கிறார்?
“ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மாதிரி இந்தப் படத்துல காமெடி இருந்தாலும் அதுக்கும்மேலே உதயநிதி சார் டான்ஸ், நடிப்புன்னு எல்லாத்துலயும் அசத்தியிருக்காரு. அப்புறம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானமும் கலக்கியிருக்காங்க. இந்தப் படத்தை குடும்பத்தோட, வந்து இந்த விடுமுறையில கலகலப்பா கொண்டாட்டமா பார்த்து ரசிக்கலாம்.” என்கிறார்.
நண்பேன்டா படம் தமிழகம் முழுக்க 400க்கும் மேற்பட்ட தியட்டர்களில் வெளியாகிறது.