கப்பல் படத்துக்குப் பின்பதாக வைபவ்க்கு வாய்ப்புக்கள் வந்து குவிந்தவன்னமே உள்ளன. எல்லா தரப்பிலும் இருந்து பல படங்கள் வந்து சேர்கின்றன. நல்ல கதைகளை தெரிவு செய்து ஒப்புக்கொண்டு வருகிறார் வைபவ்.
இந்நிலையில், குறிப்பிடத்தக்க படங்களாக ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், குஷ்புவின் அவ்னி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னுமொரு படத்திலும் வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களோடு இன்னும் சில படங்களையும் ஒப்பந்தம் செய்வதற்கு கதை கேட்டு வருகிறார்.
அத்தோடு, ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பேராண்மை, அரவாண், பரதேசி ஆகிய படங்களில் நடித்த அழகு நடிகை தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆக, இந்த ஜோடியின் இணைப்பாட்டத்தில் முருகதாஸ் படம் ஆஹா ஓஹோ என வரவுள்ளது என நம்பிக்கை வைக்கிறோம்.
-கோடம்பாக்கக் குருவி-