Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
கொம்பன் படத்தில் விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்…! – மனம் திறந்து உண்மை பேசிய லட்சுமிமேனன்

lakshmi-menon - கொம்பன் படத்தில் விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்…! – மனம் திறந்து உண்மை பேசிய லட்சுமிமேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,552 Views
நடிப்புக்காக படிப்பை விட்ட நடிகைகள்தான் அதிகம். லட்சுமிமேனனோ படிப்புக்காக நடிப்பையே துறக்க முடிவு செய்தவர். பிறகு அவரது நலம்விரும்பிகள் பலரும் கேட்டுக் கொண்டதால் பரீட்சையை முடித்துவிட்டு மீண்டும் நடிக்க வர சம்மதித்தார்.
 

பரீட்சைக்காக புதுப்பட வாய்ப்புகளை மறுத்து வந்த லட்சுமிமேனன், தற்போது பரீட்சையை எழுதி முடித்துவிட்டதால் இனி புதுப்படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறாராம். ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளத்திலிருந்து சென்னைக் வந்திருந்தார் லட்சுமிமேனன்.
 

அப்போதுதான் இந்தத் தகவலை தெரிவித்தார்.
 

பிறகு ‘கொம்பன்’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்…
 

”கொம்பன்’ படத்தில் நடித்தது பற்றி சொல்ல வேண்டும் என்றால்… அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார்!  நான்தான் நல்லா நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணி சொல்லி தருகிறார் என்று அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு!


சொல்லப் போனால் அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்! ஆனால் இப்போது தெரிந்தது எதற்கு அவர் அப்போது அப்படியெல்லாம் சொல்லி தந்தார் என்று! படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. தினம் தினம் எனக்கு நிறைய Phone Calls  வருகிறது.”
 

என்று முத்தையா மற்றும் கொம்பன் பற்றி சிலாகித்துப்பேசிய லட்சுமி மேனன் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்ஸ்
 

”நான் இதுவரைக்கும் ‘கொம்பன்’ படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம் இதுவரை நடந்து வந்த பரீட்சைதான். ஆனால் கண்டிப்பாக விரைவில் பார்த்து விடுவேன்!”
 
செம படிப்பா இருப்பார் போலருக்கே!


=== CASTRO RAHUL ===

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top