தமிழில் வந்த வேகத்தில், பல முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்து பெரிய வரவு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் புஸ்வாணமாகிப் போனவர் நடிகை தமன்னா.
இறுதியில் ஒரு சில படங்களில் தலைகாட்டி வரும் தமன்னா, இப்பொழுது பெரியளவு வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிக்கவுள்ளார்.
அதாவது, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள அக்ஷய கிருதியை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று, தனது தந்தையுடன் இணைந்து இணையத்தளம் ஒன்றை தொடங்கி அதில் நகை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இதில் சிறப்பு என்னவெனில், இந்த நகை விற்பனையில் தமன்னாவின் கைவண்ணத்தால் உருவாகியுள்ள நகைகள் தான் விற்பனைக்கு வந்துள்ளனவாம். ஆக, தமன்னாவின் கைவண்ணம் நம் பெண்களின் எண்ணம் போல ஜொலிக்கப் போகிறது.
-கோடம்பாக்கக் குருவி-