Hafeez cleared to bowl in international cricket - சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச விதிக்கப்பட்ட தடை ஹபீஸ்க்கு நீக்கப்பட்டது..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,443 Views
சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச விதிக்கப்பட்ட தடை ஹபீஸ்க்கு நீக்கப்பட்டது..!
சர்வதேச போட்டி விதிமுறையின் பிரகாரம் பந்துவீச தடை விதிக்கபட்ட பாகிஸ்தானின் சுழல் பந்து வீச்சாளர் மொஹமட் ஹாபீஸ்க்கான பந்துவீச்சு தடை இன்றுமுதல் நீக்கபடுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. பந்தை எறிகின்றனர் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்கனவே பாகிஸ்தானின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களான சைட் அஜ்மல் மற்றும் ஹாப்ஸ் ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடைவிதிக்கபட்டது.
இவர்களது தடையின் காரணத்தால் பாகிஸ்தானின் உலக கிண்ண அணி பந்துவீச்சில் பலவீனப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அண்மையில் சீரான பந்துவீச்சை காண்பித்து தடையினை தளர்த்திக்கொண்ட அஜ்மலைத் தொடர்ந்து ஹபீஸ்க்கான தடையும் இன்று நீக்கபட்டுள்ளது.
கடந்த ஏபரல் 9 ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பந்துவீச்சு சோதனையில் தேறியதன் அடிப்படையிலேயே இந்த தடை நீக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.