கொல்கத்தாவை சேர்ந்தவர் தும்பா. இவருக்கு 6 மாத குழந்தை உள்ளது. கடந்த 3 ஆம் திகதி குழந்தையுடன் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார் தும்பா.
அப்போது குழந்தையின் பாட்டி மற்றும் மாமா அறைக்குள் ரகசியமாக நுழைந்துள்ளனர்.
தூங்கிக்கொண்டிருந்த 6 மாத குழந்தையின் கண்களுக்குள் ஆசிட்டை செலுத்தியுள்ளனர்.
குழந்தையின் கதறல் கேட்ட பிறகே தும்பாவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவந்தது.
தும்பா மற்றும் அவரது கணவர் குழந்தையை எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவர்கள் கண் மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து குழந்தை கொல்கத்தா நேஷனல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.