ukrain Prisoner - கைதியை நீதிமன்றம் அழைத்து வந்த போது தப்பியோட முயற்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,863 Views
அழுத்கடை பகுதியில் வைத்து கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் பொலிசார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சிறைச்சாலையிலிருந்து அழுத்கடை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது பொலிசார் அகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதியை மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு 23 ஆம் திகதி ராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி பிரவேசித்து அங்கு வசித்த 6 வயது யுக்ரேன் நாட்டு குழந்தையையும் இலங்கை பணிப்பெண் ஒருவரையும் கொலை செய்துள்ளார்.
குறித்த வீட்டில் வசித்து வந்த யுக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரை கொலை செய்யவே வந்ததாகவும், அவர் வீட்டில் இல்லாமையினால் அவரின் குழந்தை மற்றும் பணிப்பெண் ஆகியோரை கொலை செய்து செய்தததோடு அவரின் மனைவியை கத்தியால் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்தார் என தெரிவித்து வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போதே தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், பின்னர் பொலிசாரினால் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.