காஞ்சனா 2 மற்றும் ஓகே கண்மணி போன்ற படங்களில் வரிசை கட்டி நடித்து நல்ல பெயர் வாங்கியுல்லவர் நடிகை நித்யாமேனன். நன்றாக நடித்துள்ளார் என பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துள்ள நிலையில், மணிரத்னம் படமே இவ்வளவு பெருமையை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது என்பதை அம்மணி மறுத்துப் பேசியுள்ளார்.
அதாவது, நான் ஏற்கனவே நடிகை தான். யாரிடமும் எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. யாருக்காகவும் நான் கட்டாயப்படுத்தி கற்றுக் கொண்டு நடிக்க வேண்டிய தேவையும் இல்லை என்று நறுக் பதில் கொடுத்துள்ளார் நித்யா.
சவாலான பாத்திரங்களை மட்டுமே ஒத்துக் கொள்வேன். ஒருமாதிரியான நடிகையை எப்போதும் இருக்க மாட்டேன் என்கிறார் இந்த கங்கா நித்யா மேனன்.
-கோடம்பாக்கக் குருவி-