உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர் ஒருவர் விஷம் அருந்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமாரவச்சி பிரதேசத்திலே மாணவர் ஒருவர் இவ்வாறு விஷயம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளாதாக பருத்திதுறை காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த மாணவர் வணிக கல்வியில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
குறித்த மாணவர் தனது நண்பர்களை விடவும் அதிக பெறுபேறுகளை பெறமுடியாமல் போனதன் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளமை முதல் கட்ட விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த மாணவரின் நிலைமை கவலைக்கிடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.