4,589 Views
வெசாக் காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தானசாலைகள் அமைக்கப்படுவது வழமை.
அவற்றில் உணவுகள், குடிபானங்கள் போன்றன வழங்கப்படுகின்றமையே இவ்வளவு காலமும் நடைபெற்று வருகின்றது. இம்முறை புதிய முயற்சியாக தானசாலை ஊடாக வை-பை வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் கொழும்பு மற்றும் மாத்தறையில் இலவசமாக வை-பை வழங்கப்படவுள்ளது.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பில் லேக்-ஹவுஸ் வெசாக் வலையத்திலும், மாத்தறை மாவட்ட த்தில் தேசிய நூலகம் மற்றும் வைத்தியசாலை சுற்றுப்பகுதியிலும் வை-பை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.