கிரிய சுவரில் எழுதியமைக்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு தமிழ் யுவதி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
ஏற்கனவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி இருந்தார்.
எனினும் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அவரை விடுவித்துக் கொள்வதில் சிக்கல் இருந்தது.

எனினும் கண்டி மேன்முறையீட்டு நீதிமன்றில் இருந்த குறித்த மனுக்கள் மீள பெற்று கொள்ளப்பட்டுள்ள நிலையிலே, அவர் விடுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீகிரிய சுவரில் தமது பெயரையும், நன்றி என்ற வார்த்தையையும் எழுதியமைக்காக, கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயசிறி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




