இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தமை பெரும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.
இந்த கோரச் செயலை தனது கணவர் கைத்தொலைபேசியில் பதிவு செய்து, நண்பர்களிடையே பகிர்ந்து பார்வையிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.