இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளை மீட்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களின் 87 படகுகள் இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவை கட்டம் கட்டமாக தமிழகமீனவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இறுதியாக இலங்கைக்கு வந்த குழுவினர் 14 படகுகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
தற்போது இலங்கையில் 16 தமிழக மீனவர்களின் படகுகள் காணப்படுகின்ற போதும், அவற்றை திருத்த முடியாது என்ற அடிப்படையில் குறித்த படகுகளை மீட்பதற்கு இனி இலங்கைக்க வரப்போவதில்லை என்று தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.