கப்பார் இஸ்பேக் என்ற இந்தி படத்தில் அக் ஷய்குமார் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வரும் அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான ஸ்ருதிஹாசன், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன் என்றும், திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, தயிர் சாதம் சாப்பிடும் ஒருவர்தான் எனக்கு மணமகனாக வேண்டும். அப்படியானவரையே தேடுகிறேன். எனக்கு சைவப் பிரியரையே பிடித்திருக்கிறது என்கிறது இந்த உலக நாயகனின் புத்திரி.
உங்களில் யாராவது செய்வம் மட்டுமே உண்பவராக இருந்தால், நீங்களும் முயன்று பார்க்கலாம் நண்பர்ஸ்...!!!
-கோடம்பாக்கக் குருவி-