2,244 Views
டார்லிங் படம் மூலம் நாயகனான ஜி.விக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது இரண்டாவது படமான பென்சில் விரைவில் வெளிவரவுள்ளது தற்போது, ஆனந்தியுடன் இணைந்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திலும் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றிமாறன் கதையில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.
பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன், ‘உதயம் என்.எச்.4’, ‘நான் ராஜாவாக போகிறேன்’ ஆகிய படங்களுக்கு கதை எழுதியுள்ளார். தற்போது எழுதியுள்ள கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார். இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சங்கர், குணா ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கவுள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பழகன் தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது
-வர்ஷி-