அடிமட்ட ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு உள்ளுராட்சி சபைகளை ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்படுத்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி சபைகளின் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்தவர்களே.
இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தமது அடிமட்ட ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
இதன்காரணமாகவே உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகத்தை ஆணையாளரின் நிர்வாகத்திற்கு கொண்டு வர அவர்கள் முயற்சி செய்கின்றார்கள்,