1,935 Views
ஸ்பெய்ன் நாட்டவரான பிகாசோவின் ஓவியங்கள் ஓவியப் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுபவை.அவரின் ஓவியங்களுக்கு மக்களின் மனதில் தனி இடம் உண்டு.
அந்த வகையில், அவர் வரைந்த "விமன் ஒப் அல்ஜியர்ஸ் " என்ற ஒவியம் அமெரிக்காவின் , நிவ்யோர்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல விற்பனை நிறுவனத்தில் 179.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (12% தரகு உள்ளடங்களாக ) ஏலம் போயுள்ளது.
சுமார் 11 நிமிடங்கள் இவ் ஏலம் நீடித்துள்ளது. இதை கொள்வனவு செய்தவர் யார் என இதுவரை வெளியாகவில்லை.
இந்த ஓவியம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்ப்பார்ப்புகளை மீறி அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது.