அங்குள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிப் பயணித்த லொரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மற்றும் ஏனைய வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 31 வாகனங்கள் பயங்கரமாக சேதமடைந்தன. இந்த கோர விபத்து இடம்பெற்ற காட்சி காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், 44 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களின் நிலைமை மோசமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவில் இது போன்று தொடர் வாகன விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக அங்கிருக்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
அத்துடன், அங்கு போக்குவரத்து விதிமுறைகளை ஓட்டுநர்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.