திரையுலகின் முன்னணி கதாநாயகி த்ரிஷா, தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பல வெற்றித் திரைப்படங்களை தந்த த்ரிஷா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 96 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் த்ரிஷாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்கின்றவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதனால் நடிகை த்ரிஷா மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளத்துடன், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு, மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.