சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் இறுதியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ''பேட்ட'' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் அமோக வசூலையும் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இதற்கான திகதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைகாவின் தயாரிப்பில் எடுக்கப் படவுள்ள இந்த படத்திற்கான முதற்கட்டப் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒளிப்பதிவாளராக "தளபதி" படத்தில் பணியாற்றி இருந்த சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜினியுடன் இணையும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
"பேட்ட" படத்துக்குப் பின்னர் மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைக்கவுள்ளார் அனிருத்.
குறித்த தகவல்களின் பிரகாரம், மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகின்றது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டாருடன் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை. நடிகர்கள் தொடர்பில் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகின்றது.
இப்படத்துக்காக ரஜினி 45 நாட்கள் ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் ரஜினியின் புதிய படம் தொடர்பான
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.