அமெரிக்காவை சேர்ந்த Xochytl 'Xochi' Greer, என்கிற 36 வயதான பெண் பிரித்தானிய இளவரசி மேகன் அழகில் மயங்கி அவரைப்போல் மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
அவர் ஆண்களுடன் பேசுவதற்கு தயக்கமாக இருந்ததால் அதிலிருந்து மாறுவதற்கு முயற்சி செய்த அவர், அமெரிக்க நடிகையாக இருந்த மேகனின் அழகில் மயங்கி அவரை போலவே மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதற்காக மருத்துவ ஆலோசனை பெற சென்ற அவருக்கு மருத்துவர்கள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் மூக்கு போன்றவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி அதற்கான அறுவை சிகிச்சையும் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. சிறிது நாட்கள் ஓய்விற்கு பின்னர் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்த Xochytl தான் அழகாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள் இருக்கின்றார்கள் அறுவை சிகிச்சைக்கு பின் மூன்றாவது மகளை பெற்றெடுத்துள்ள Xochytl, மேகனை எப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்தாலும் என்னுடைய மகள் 'அம்மா, அம்மா' என அழைக்க ஆரம்பித்துவிடுவாள் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.