மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட அந்தக்கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சீதா லட்சுமி. இவர் எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மேல் ஆணை, அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்த கண்ணீர் உள்பட பல படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த் உடன் அன்புக்கு நான் அடிமை, தனுஷ் உடன் சீடன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவர் நடன இயக்குனர் ராதிகாவின் தாயார்.
நோய்வாய்பட்டிருந்த நடிகை சீதாலட்சுமி நேற்று மாலை காலமானார். இவரது உடல் சென்னை நெற்குன்றத்தில் உள்ள மகள், நடன இயக்குனர் ராதிகாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளன.