வாலு படத்தில் இணைந்து நடித்தவர்கள் சிம்பு ஹன்சிகா இவர்கள் படப்பிடிப்பின்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால், படப்பிடிப்பு முடியும் முன்னே இவர்களது காதல் முறிந்தது.
இந்நிலையில், ஹன்சிகா தனது ட்டுவிட்டரில் இருவர் கைபிடித்திருப்பது போல் படம் ஒன்றைப்போட்டு நானும் சிம்புவும் மீண்டும் மஹா திரைப்படத்தில் இணைத்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்கள் கூறி ட்டுவிட் செய்ததோடு அண்ணி என்றே அழைக்கின்றார்கள்.
ஹன்சிகாவின் 50வது படமான மஹாபடத்தின் போஸ்டர் வெளிவந்து சர்ச்சையில் சிக்கினார் ஹன்சிகா என்பதும் குடிப்பிடத்தக்கது.