Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
12
பிரபல நடிகர் மீது நடிகை விஜயலக்ஷ்மி பாலியல் புகார்

SooriyanFM Gossip - பிரபல நடிகர் மீது நடிகை விஜயலக்ஷ்மி பாலியல் புகார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,325 Views
கன்னட நடிகர் ரவிபிரகாஷ் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து, மீண்டும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சினை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துள்ளது.
பூந்தோட்டம் என்ற படத்தில் தேவயானி தங்கையாக வந்த விஜயலட்சுமி, ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமானார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த மீசையை முறுக்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரி உஷா தேவி பண உதவி செய்யும்படி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கன்னட பட உலகினர் அவருக்கு உதவி வருகிறார்கள். பிரபல கன்னட நடிகர் ரவி பிரகாஷ் சில நாட்களுக்கு முன்பு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து ரூ.1 லட்சம் வழங்கினார். அவர் மீது விஜயலட்சுமி தற்போது புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

மனுவில், “நடிகர் ரவிபிரகாஷ் மருத்துவமனையில் என்னை சந்தித்து ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு எனது செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவிபிரகாஷ் கூறும்போது, “விஜயலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவருக்கு உதவியது தவறு என்று இப்போது உணர்கிறேன்” என்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top