போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான Cardinal George Pellலுக்கு, 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான 77 வயதுடைய Cardinal George Pell மீது, சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 1990 -ன் இறுதித் பகுதியில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக இவர் நடந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பின்னரே பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனபோதிலும் அவர் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்த தீர்ப்பிற்கு எதிராக ஜூன் மாதத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.