தென்அமெரிக்கா கண்டத்தில் அழகிய நாடு என்றால், பெரு நாட்டிற்கு ஒரு தனி இடமே உண்டு.
உலக நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சூழ்ந்த அழகிய சாம்ராஜ்யம் பெரு என்கிறார்கள் பலரும்.
பெரு நாட்டின் அதிபராக, Martín Vizcarra ஆட்சி செய்து வருகின்றார். கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளோடு சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார் (Salvador del Solar ), மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியை பதவியேற்ற மறு ஆண்டான கடந்த 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப, முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா 23-3-2018 அன்று பதவியேற்றார்.
நாட்டில் அதிபர் மாற்றம் ஏற்பட்டதுடன் தனது பதவிக்காலத்தில் மனநிறைவு கொள்வதாக அறிவித்த பிரதமர் சீசர் வில்லனுயேவா, கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான 48 வயதான சால்வடார் டெல் சோலார் புதிய பிரதமராக நேற்று பதவி ஏற்றுள்ளார்.