பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு அது சாபக்கேடாக மாறும் பரிதாபம் நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலம் ஆகலாம், பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பலரும் வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவர்கள் நடந்து கொள்வதை பார்வையாளர்கள் மறப்பதே இல்லை. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு ஒரு சிலரின் கெரியர் மட்டுமே பிக்கப் ஆகியுள்ளது. மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது.
பிக் பாஸ் 2 சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் முதல் சீசனின்போது பொய் பேசியதற்காக ஜூலியை நெட்டிசன்கள் இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். காயத்ரி ரகுராமின் நிலையும் அது தான். அவர்கள் என்ன ட்வீட் போட்டாலும் கேவலமாக திட்டுகிறார்கள் நெட்டிசன்கள்.
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததால் நல்ல பெயர் வாங்கிய ஓவியா 90 எம்.எல். படத்தில் மோசமாக நடித்ததை பார்த்தவர்கள் அந்த நேரம் மட்டும் ஜூலியை பாராட்டினார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம தமிழச்சி ஜூலி தரம் தாழ்ந்து நடிக்க மாட்டார் என்றார்கள். பின்னர் பழையபடி ஜூலி போலி என்று அவரை திட்டத் தொடங்கிவிட்டனர்.
சமீபத்தில் போலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் ஜூலியின் பெயர் அடிபட்டது.
இந்நிலையில் ஜூலி தற்போது உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "செத்துடு, ஏன் உயிரோட இருக்க? என கேட்கிறீர்கள். என்னால் உங்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டதா? இல்லை உங்களை ஏமாற்றிவிட்டேனா? ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீர்கள்" என ஜூலி கேட்டுள்ளார்.
பிக்பாஸில் நான் பொய்தானே சொன்னேன் ஏன் என்னை தொடர்ந்தும் திட்டுகின்றீர்கள் என்று வீடியோ மூலமாக பேசியுள்ளார்.