இந்தியா வம்சாவளி பெண்ணான 30 வயது லில்லி சிங், உலகளவில் அறியப்பட்ட ஒருவர். சிறந்த நகைச்சுவை நடிகரும், youtube நட்சத்திரமாகவும் பிரபல்யம் ஆனவர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீமாக கொண்ட இவர் டொரெண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு "Monique Super Women" எனும் யூடியூப் channel ஒன்றை ஆரம்பித்து, 14 மில்லியன் viewsசை பின்தொடர வைத்துள்ளார்.
இப்படி பிரபலமான லில்லி சிங்ற்கு அடிசிருக்கு இப்போது அதிஷ்டம். அமெரிக்காவின் புகழ்பெற்ற என்பிஎஸ் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் ஒரு உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.
குறித்த நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பப்பட உள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அமெரிக்க தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்று கூறப்படுகின்றது.
லில்லி சிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இது குறித்து லில்லி சிங் கூறுகையில், ‘இந்த குழுமத்துடன் இணைவதை மிகுந்த மகிழ்ச்சியாகவும், இது இறைவன் எனக்கு வழங்கிய ஆசியாகவும் கருதுகிறேன். இதற்காக என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
இதற்கிடையில் லில்லி கடந்த 2017ம் ஆண்டிற்கான விருப்பமான யூடியூப் நட்சத்திரம் எனும் புகழ்பெற்ற people's choice awardsனையும் பெற்றுள்ளார்.
இதுதவிர, ஐஸ் ஏஜ்:கொலீசன் கோர்ஸ் மற்றும் பேட் மோம்ஸ் எனும் திரைப்படங்களில் லில்லி நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனக்கு அமெரிக்கா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுக்கும் வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் காணொளி ஒன்றை மிகவும் பரவசத்துடன் பதிவிட்டுள்ளார்.