பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் தளத்தில், காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளி தான் என்ற வீடியோ டுவிட்டரில் வைரலாக பரவியது.
இதனை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் அங்கத்தவர்கள் பலர், தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை இணைத்துக்கொண்டனர்.
இந்த பதிவிற்கு ஆதரவு மட்டுமல்லாது, பல எதிர்ப்புக்களை வெளியிடப்பட்டன. இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில், ஒரு நாய் ‘நானும் காவலாளி தான்’ என்று சொல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவு பல சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.