அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்த திரைப்படத்தை உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் கீதம் உருவாக்குகிறார்.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ம் திகதி வெளியாகவுள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, என் குடும்பம் மற்றும் என்னை சுற்றியே பல மார்வெல் ரசிகர்கள் இருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.