தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரை கௌரவப்படுத்தும் விதமாக 'Madame Tussauds' அவருக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை வைத்துள்ளது.
அந்த சிலை நேற்று முன்தினம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டும் அது மகேஷ்பாபு நடத்திவரும் AMB சினிமாஸ் மல்டிபிளக்ஸில் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அது சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதை பற்றி மகேஷ் பாபு தமது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.